இதயம் தொடர்பான சத்திர சிகிச்சை நூறு சதவீதம் வெற்றி பெறுவதற்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவத் தொழில்நுட்பங்களுடன் தயாரான பல நவீன கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு பலனளித்து வருகிறது. இந்த பட்டியலில் தற்போது இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் (IVUS) எனும் நவீன கருவியும் இணைந்திருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பொதுவாக இன்றைய திகதியில் எம்மில் பலரும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை நடைமுறையால் இளம் வயதிலேயே மாரடைப்பு எனும் இதய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். மாரடைப்பு ஏற்பட்ட பிறகு மருத்துவர்கள் ஒஞ்சியோகிராம் எனும் பரிசோதனையை மேற்கொண்டு இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா! என்பது குறித்தும், ரத்த நாளங்களில் ரத்தக் கசிவு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் துல்லியமாக அவதானிக்கிறார்கள்.
இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு படிவின் காரணமாக அடைப்பு ஏற்பட்டு, அதனால் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அந்த அடைப்பினை நீக்குவதற்காக ஸ்டென்ட் பொருத்துதல் எனும் சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
மருத்துவ நிபுணர்கள் மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு பொருத்தும் ஸ்டென்ட் ரத்த குழாய்களில் மிக துல்லியமாக பொருத்தப்பட்டிருக்கிறதா..? என்பதனை அவதானிக்க தற்போது இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் எனும் நவீன கருவி அறிமுகமாகி பலனளித்து வருகிறது. இந்த கருவியை மூலம் இதய அடைப்பிற்காக ரத்த நாளத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டென்ட் சரியாக பொருத்தப்பட்டிருக்கிறதா..! என்பதனை கணினி மூலமாகவும், புகைப்படங்கள் மூலமாகவும் மருத்துவ நிபுணர்களுக்கு வழங்கி, அவர்களின் சத்திர சிகிச்சை நூறு சதவீத வெற்றியை உறுதிப்படுத்துகிறது. மேலும் டூப்ளெக்ஸ் அல்ட்ரா சவுண்ட் எனும் கருவியை விட மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இந்த அல்ட்ரா சவுண்ட் கருவி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டு, ஸ்டென்ட் பொருத்திக் கொண்டிருக்கும் நோயாளிகள், அதன் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும். மேலும் ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரத்தம் உறையாதிருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றினை உறுதியாக பின்பற்றினால் மட்டுமே இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்காக பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டென்ட் ரத்தக்குழாய்களுடன் பொருந்தி, இயல்பாக பணியாற்றும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால், மீண்டும் அவ்விடத்தில் பாதிப்பு ஏற்பட்டு அவை பாரிய விளைவை ஏற்படுத்த கூடும்.
டொக்டர்: முத்துக்குமரன்
தொகுப்பு: அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM