(ஆர்.யசி )

பிரபாகரனை நியாயப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்த கருத்து ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தாக கருதமுடியுமா என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைவாத நிலைப்பாட்டுக்கும் அப்பால்சென்ற ஒரு பிரிவினைவாத நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று நிதிக் குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்த கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.