மனைவி மீது கொண்ட காதலை விசித்திரமான முறையில் வெளிக்காட்டிய நபர்

Published By: Digital Desk 3

22 Feb, 2023 | 10:38 AM
image

தாய்லாந்திலுள்ள நபர் காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு வித்தியாசமான பரிசை அளித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். 

தாய்லாந்தின் சரபுரி மாகாணத்தில் கேங் கோய் தாய்லாந்து என்ற பெயரில் பச்சை குத்தும் நிலையம் இந்த தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த வால் தனது மனைவிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனித்துவமான பரிசைத் வழங்க திட்டமிட்டார். 

பச்சை குத்தும் நிலையத்துக்குச் சென்று தனது திருமணச் சான்றிதழை அவரது கைகளில் பச்சை குத்திக் கொண்டார்.

இது காதலுக்கு மிகப்பெரிய சான்று. 8 வருடங்களாக மனைவி மீதான அவரது காதல் உண்மையிலேயே போற்றத்தக்கது. திருமண சான்றிதழை மணிக்கட்டில் முழுதாக பச்சை குத்தியுள்ளார். 

குறித்த சான்றிதழை பச்சை குத்துவதற்கு 8 மணித்தியாலம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்துள்ளார் வால். அவரது மனைவி பச்சை குத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் ஆச்சரியப்படுவதை வால் விரும்பினார். 

வாலின் மனைவி பச்சை குத்துவதை அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாகக் கருதினார். இதற்கிடையில், பச்சை குத்தியதை பார்க்கும்போதெல்லாம், அவர் தனது மனைவியுடன் கழித்த நல்ல நேரங்களை நினைவுபடுத்துவதாக வால் கூறுகிறார்.

அவர்கள் எப்போதாவது சண்டையிட்டால், பச்சை குத்தியதை பார்க்கும் போது அவர்களின் ஆழமான காதல் தருணத்தை நினைவுபடுத்துவதாக இருக்கும். பின்னர் ஒருவரையொருவர் ஈகோவை மறந்து ஒருவரையொருவர் அதிகமாக நேசிக்க தொடங்குகிறோம் என வால் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்