தேர்தலை நடத்துவதற்கான நிதியை திரட்டத் தயார் - பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு

Published By: Vishnu

21 Feb, 2023 | 08:22 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி திரட்டுவதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தயாராக உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நிதிப் பற்றாக்குறை தான் உண்மையான பிரச்சினை என்றால் தேர்தலுக்கான நிதியைப் பெறுவதற்கான பணிகளை இந்த வாரத்தில் இருந்து தொடங்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

மக்களின் உரிமைகளை சீர்குலைக்கும் வகையில் நிதிப் பிரச்சினைகளை முன்வைத்து அரசாங்கம் தேர்தலை பிற்போட அனுமதிக்க முடியாது. 

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வோம். அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை அனைத்து தேர்தல்களையும் ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வு பற்றி அடிக்கடி பேசுகிறார். ஆனால் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இரண்டையும் நடத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்கிறார்.

நிதி நெருக்கடிகள், தேர்தலை நடத்த முடியாது என்று முன்னர் எந்த அரசாங்கமும் கூறவில்லை. இன்று எதற்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்? உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்தால் எதிர்காலத்தில் ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் அதே முறையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும். இவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை...

2024-03-03 14:46:29