இங்கிலாந்து லயன்ஸுடனான ஒருநாள் தொடரை இலங்கை ஏ அணி கைப்பற்றியது

Published By: Vishnu

21 Feb, 2023 | 07:08 PM
image

(என்.வீ.ஏ.)

இலங்கை ஏ அணிக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த 3 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை ஏ அணி கைப்பற்றியது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர் இரண்டாவது போட்டியுடன் 1 - 1 என சமப்படுத்தப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கடைசி போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த இலங்கை ஏ அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டி தொடரை தனதாக்கிக் கொண்டது.

கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து லயன்ஸ் அணி 45 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்ப வீரர் ஜேக்கப் பெதெல் (50), ஜோர்டான் கொக்ஸ் (31), டொம் ஹாட்லி (22) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

இலங்கை ஏ அணி பந்துவீச்சில் இசித்த விஜேசுந்தர 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷான் ஹேமன்த 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சுமிந்த லக்ஷான் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 32.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நிப்புன் தனஞ்சய ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களைப் பெற்று இலங்கை ஏ அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.

லஹிரு குமாரவுடன் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகேயுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களையும் நிப்புன் தனஞ்சய பகிர்ந்தார்.

தனஞ்சயவைவிட சதீர சமரவிக்ரம (23), சஹான் ஆராச்சிகே (22 ஆ.இ.), லஹிர உதார (21) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

இங்கிலாந்து ஏ அணி பந்துவீச்சில் மெசன் க்ரேன் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20