இலங்கையைச் சேர்ந்த முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்னையான சுசந்திகா ஜெயசிங்க விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்றில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சல் காரணமாக தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசந்திகா மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

சுசந்திகா ஜெயசிங்க ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்க பெருமை சேர்த்த வீராங்கனை என்பதுடன், இவர் சர்வதேச போட்டிகளுக்கு வீர, வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.