'ஆபரேஷன் தோஸ்த்' வெற்றி - இந்தியா

Published By: Vishnu

21 Feb, 2023 | 04:44 PM
image

துருக்கி பூகம்பத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க இந்தியாவிலிருந்து சென்ற மீட்புப் படையினர் தாயகம் திரும்பியுள்ள நிலையில் அவர்களுடன் பிரதமார் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ஆம் திகதி நிகழ்ந்த அடுத்தடுத்த பூகம்பங்களால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள், வீடுகள் சரிந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்ததுடன் பலர் உயிருக்குப் போராடும் நிலை தொடர்ந்தது.

இதனிடையே, 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் துருக்கி மற்றும் சிரியாவுக்குத் தேவையான உதவி நடவடிக்கைகளைத் தொடங்க பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், இந்தியாவிலிருந்து 151 பேர் அடங்கிய 3 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு விமானப் படை விமானம் மூலம் துருக்கிக்கு விரைந்தது.

நூர்தகி மற்றும் அண்டக்யா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற 35-க்கும் மேற்பட்ட மீட்புப்பணிகளில் இந்திய படையினர் ஈடுபட்டனர். மீட்புப் பணி முடித்து இவர்கள் அண்மையில் தாயகம் திரும்பினர். இந்நிலையில், துருக்கியில் உயிருக்குப் போராடிய பலரைக் காப்பாற்றுவதற்கு கடுமையாக உழைத்த மீட்புப் படையினரைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவில் இருந்தும் மீட்புக் குழுவினர் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், மேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும் இந்தியா அனுப்பியிருந்தது. நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் சென்ற இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் துருக்கியில் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர்.

துருக்கி மற்றும் இந்தியா இடையிலான நட்பை உறுதி செய்யும் வண்ணம் இந்த அவசரகால நிவாரணக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஆபரேஷன் தோஸ்த் என்று பெயர் வைத்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் துருக்கி சென்ற இந்திய மீட்பு படையில் மேஜர் பீனா திவாரி என்ற  பெண் மருத்துவ அதிகாரி உட்பட 99 மருத்துவ அதிகாரிகள் அடங்கிய இந்தியக் குழு துருக்கி சென்றது. டாக்டர் பீனா திவாரி, துருக்கியில் மீட்கப்பட்ட பெண்ணுடன் இருந்த புகைப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது. 

இது குறித்து பாராட்டுக்களை பலரும் தெரிவித்திருந்த நிலையில், பேரிடர்களில் பாதிக்கப்பட்ட உலக நாடுகளுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டுவது இந்தியா பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.  

இந்தியாவின் மீது உலக நாடுகளுக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. உலகின் எந்த நாடு இயற்கை பேரிடரால் நிலைகுலைந்தாலும், முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா உள்ளது.

நேபாள பூகம்பம், இலங்கை பொருளாதாரப் பிரச்சினை என எதுவாக இருந்தாலும் உதவுவதற்கு இந்தியா முதன்மையாக முன்வந்தது. தற்போது துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த பூகம்ப பேரிடரில் மீட்புப் பணிகளில் இந்தியா உதவியுள்ளது. இதனால், இந்திய  மீட்புப் படையினர் மீதும் மற்ற நாடுகளின் மதிப்பு உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47