வன்வெப் செயற்கைக்கோள்களின் இரண்டாவது தொகுதி இந்தியாவை வந்தடைந்தது - இஸ்ரோ

Published By: Vishnu

21 Feb, 2023 | 12:55 PM
image

வன்வெப் - 36 செயற்கைக்கோள்களின் ஒரு தொகுதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவைச் சென்றடைந்ததாக இங்கிலாந்தைச் சேர்ந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இதனை உறுதிப்படுத்தியது.  

புளோரிடாவிலிருந்து கிட்டத்தட்ட 9,000 மைல் பயணத்தைத் தொடர்ந்து, எங்கள் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இந்தியாவிற்கு வந்துவிட்டனஎன்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. மேலும் இஸ்ரோ மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உடனான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளோம் என்று வன்வெப் தெரிவித்துள்ளது.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஏவுகணை வாகனம் மார்க்-3 மூலம் ஏவப்படும். கடந்த ஆண்டு அக்டோபரில், இந்திய விண்வெளி நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வன்வெப் மூலம் 36 செயற்கைக்கோள்களின் முதல் தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இது உலகளாவிய வணிக ஏவுதள சேவை சந்தையில் ராக்கெட் நுழைவதைக் குறிக்கிறது.

தனியார் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான வன்வெப் இந்திய நிறுவனங்களில் ஒரு பெரிய முதலீட்டாளராகவும் பங்குதாரராகவும் கொண்டுள்ளது. விண்வெளித் துறையின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா, லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு வன்வெப்-ஐ இயக்கும் நெட்வேர்க் எக்சஸ் எசோசியேடட்  உடன் முன்னதாக இரண்டு சேவை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48
news-image

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஸ்யா நிபந்தனைகளை...

2025-03-13 10:17:40
news-image

''ஆர்பிஜியொன்று புகையிரதத்தின் இயந்திரத்தை தாக்கியது அதன்...

2025-03-12 17:32:53
news-image

கொரியாவில் நெருக்கடி : ஆசியாவுக்கான ஜனநாயக...

2025-03-12 21:07:58