(க.கிஷாந்தன்)

 

மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் பதுளை – கொழும்பு பிரதான வீதிகள், அப்புத்தளை மற்றும் பெரகல பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது.

இந்நிலையில் காலை வேளைகளில் நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் ஓட்ட வேண்டும் என்பதோடு, சாரதிகள் தங்கள் வாகனங்களின் மின்விளக்குகளை (ஹெட்லைட்) போட்டவாறு  வாகனங்களை  செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.