தேர்தல் குறித்த ரிட் மனுவை வியாழனன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

Published By: Digital Desk 3

21 Feb, 2023 | 09:09 AM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துமாறு உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை நாளை மறுதினம் வியாழக்கிழமை (23) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பினை 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருந்த போதிலும் , குறித்த தினங்களில் வாக்கெடுப்பு இடம்பெறாது என கிடைக்கப் பெற்ற நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் நேற்றைய தினம் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது அவசியமல்ல என்று தேர்தல் ஆணைக்குழு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் , இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதால் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பதால் , தேர்தலை ஒத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டபிள்யு.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உயர் நீதிமன்றத்தில் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் , அதனை மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. எவ்வாறிருப்பினும் தபால் மூலம் வாக்கெடுப்பு 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், அதற்கு முன்னர் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு நேற்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது தேர்தல் ஆணைக்குழு சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் , 23ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது என்பதால் இந்த மனுவை ஏற்கனவே தீர்மானித்த படி 23ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கைக்க மனுதாரர் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா உள்ளிட்டவர்களால் ஆட்சேபனை வெளிப்படுத்தப்படாமையால் , குறித்த ரிட் மனுவை 23ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர் குழாம் தீர்மானித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு...

2023-05-29 22:27:51
news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48