உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

Published By: Vishnu

20 Feb, 2023 | 08:31 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சியின் அரச தலைவர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும்.

மாகாண சபையின் நிலைமை உள்ளுராட்சிமன்றங்களுக்கும் தோற்றம் பெற இடமளிக்க முடியாது. தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கட்சி என்ற ரீதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். வெற்றியோ, தோல்வியோ தேர்தலை நடத்த வேண்டும்.யாருக்கு அரசாங்கத்தை வழங்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள்,தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

அடுத்த வருடம் தேர்தல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்த கருத்து கவலைக்குரியது.

தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுக்க வேண்டும், ஆணைக்குழுவிற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் மாத்திரம் தான் அந்த அதிகாரம் உண்டு.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது, சட்டத்திற்கு முரணாக தேர்தலை பிற்போட எவரேனும் முயற்சித்தால் கட்சி என்ற ரீதியில் முதலாவதாக நாங்கள் தான் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

முறையாக தேர்தலை நடத்த வேண்டுமாயின் முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் என்பதை குறிப்பிடுவதையிட்டு அச்சமடைய தேவையில்லை, அதுவே உண்மை. நல்லாட்சி அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை ஒருபோதும் மறுக்கமாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பெறுவதை தவிர வேறு எந்த...

2023-06-01 17:28:05
news-image

அரச பயங்கரவாதத்தை தக்க வைக்கும் கலாசாரமே...

2023-06-01 21:30:41
news-image

நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நாணய நிதியத்தின் தொடர்ச்சியான...

2023-06-01 21:33:04
news-image

சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -...

2023-06-01 21:32:11
news-image

பணவீக்கம், உணவுப் பணவீக்கம் என்பவற்றில் 10...

2023-06-01 21:31:24
news-image

நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை...

2023-06-01 20:34:59
news-image

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை...

2023-06-01 20:10:41
news-image

வட்டிவீதங்களைக் குறைத்தது மத்திய வங்கி

2023-06-01 17:20:17
news-image

தேசிய வருமான வரி : வருடத்திற்கு...

2023-06-01 17:26:55
news-image

நிலையான பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி ரணிலின்...

2023-06-01 16:53:59
news-image

சீன முதலீட்டில் பண்ணையா ? அங்கஜனுக்கு...

2023-06-01 17:23:46
news-image

உத்தேச சட்டமூலங்கள் குறித்து ஆராய எதிர்க்கட்சியால்...

2023-06-01 21:34:08