அமாவாசை திதிகளில் மட்டும் தான் தர்ப்பணம் செய்ய வேண்டுமா?

Published By: Nanthini

20 Feb, 2023 | 08:41 PM
image

ன்றைய திகதியில் எம்மில் பலரும் வெற்றி பெறுவதற்கு கண்களுக்கு புலப்படாத பல மாய தடைகளே சூட்சமமாய் இருக்கிறது. இதற்கு  எம்முடைய முன்னோர்கள் அறிந்தோ அறியாமலோ நிகழ்த்திய பாவ செயல்களே முழு முதற்காரணம். 

இவையனைத்தும் எம்முடைய இந்த ஜென்ம கர்ம வினைகளில் பித்ரு தோஷமுமாகவும், அதனை தொடர்ந்த பாவ செயல்களாகவும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை களையவே இயலாதா... இந்த ஜென்மத்தில் எம்மால் இதனை முற்றிலும் அகற்ற இயலாதா... என பலர் புலம்புவர். ஆனால், நிச்சயம் இந்த ஜென்மத்தில் அதனை அகற்றக்கூடிய வாய்ப்பினை இறை சக்தி எமக்கு அளித்திருக்கிறது. 

இதனை உங்களுடைய ஆஸ்தான ஜோதிட வல்லுநரிடம் தொடர்ச்சியாக ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெறும்போது கிடைக்கும்.

பித்ரு தோஷங்களை நீக்குவதற்கு ஜோதிடர்கள் பல விதிகளை வகுத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு பித்ரு ப்ரீத்தி என்றும், பித்ரு தோஷங்கள் என்றும் பித்ரு சாந்தி என்றும் தனித்தனியே பிரித்து, அதற்குரிய விடயங்களையும் தனித்தனியே வரையறை செய்திருக்கிறார்கள்.

மேலும் அமாவாசை திதிகளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது மரணம் அடைந்த தந்தையாரின் கோத்திரம், நட்சத்திரம், பெயர், அவருடைய தந்தையாரின் பெயர்... ஆகியவற்றை சொல்லி தர்ப்பணம் செய்கிறோம். இதன் மூலம் பித்ருக்களுக்கு ப்ரீத்தி சாந்தி ஆகியவற்றை மேற்கொண்டு எம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும் பித்ரு தோஷத்தின் சுமையை குறைத்துக்கொள்கிறோம்.

இந்தத் தருணத்தில் எம்மில் பலரும் ''நான் எம்முடைய தந்தைக்கும் அவருடைய முன்னோர்களுக்கும் சிறப்பாகவும் தொடர்ச்சியாகவும் நன்முறையில் பித்ரு ப்ரீத்தி செய்து வருகிறேன். இருப்பினும் எம்முடைய பல முயற்சிகளில் மாயத் தடைகள் நீடித்து வருகிறது. இது ஏன் என்ற குழப்பம் மனதில் எழும். இந்தத் தருணத்தில் அனுபவம் வாய்ந்த சோதிடர்கள் ஒரு விடயத்தை முன்னிறுத்துகிறார்கள்.

உங்களுடன் பிறந்த அல்லது உங்களுக்கு முன் பிறந்து இறந்த, சிறுவயதில் இறந்த அல்லது கருவாக இருக்கும்போது வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்ட உயிர்களும், அதன் ஆத்மாவும் முறையான ப்ரீத்தி பெறுவதில்லை. 

மேலும் விபத்து, தற்கொலை போன்றவற்றால் அகால மரணமடைந்தவர்களுக்கும் நாம் முறையாக பித்ரு தர்ப்பணம் அல்லது பித்ரு சாந்தி மேற்கொள்வதில்லை. இதன் காரணமாக முன்னோர்களின் பரிபூரண ஆசி நமக்கு கிடைக்காமல், மாயத்தடைகளை நீட்டித்துக்கொண்டிருக்கிறது.

மேலும் வேறு சிலருக்கு முன்னோர்களுக்கும் அகால மரணம் அடைந்த உடன் பிறந்தவர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்றால், அமாவாசை திதி மட்டும்தான் இருக்கிறதா... வேறு திதிகளில் தர்ப்பணம் செய்ய இயலாதா, கூடாதா... என வினா எழுப்புவர். இவர்களுக்கும் சோதிடம் நல்லதொரு வழியை எடுத்துரைக்கிறது. 

செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தசி திதியும் சேரும் நாட்களில் நீங்கள் தர்ப்பணம் செய்தால், முன்னோர்களின் சாபம் தோஷம் அகலும். குறிப்பாக பித்ரு தோஷம் நீங்கும்.

இது மட்டுமல்ல திதிகளில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமங்களும் மறைந்து இருக்கின்றன. அதாவது குறிப்பிட்ட திதிகளும் வாரத்தின் ஏழு கிழமைகளில் பிரத்யேக கிழமைகளும் இணைந்திருக்கும் தருணத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான காரியங்களில் ஈடுபட்டாலோ தொடங்கினாலோ ஜெயம் உறுதி. அதற்கான விபரங்களை தொடர்ந்து காண்போம்.

• ஞாயிற்றுக்கிழமையும், சப்தமி திதியும் வளர்பிறை காலகட்டங்களில் இணைந்திருந்தால், அதனை 'பானு சப்தமி' என்றும், அதே ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் தேய்பிறை கால கட்டங்களில் இணைந்திருந்தால், அதனை 'விஜய சப்தமி' என்றும் சோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இந்த பிரத்யேக நாளில் நீங்கள் செய்யும் காரியங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக விருத்தி அடைந்து வெற்றியை தரும். 

மேலும் குறிப்பாக உங்களுடைய சங்கடங்கள் நீங்க சோதிடர்கள் விருட்ச பரிகாரத்தை வலிமையாக பரிந்துரைத்திருந்தால், அதனை இந்த நாளில் மேற்கொண்டால், உங்களுக்கான பலன் எதிர்பார்த்ததை விட விரைவாகவும் நிறைவாகவும் கிடைக்கும்.

• செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் இணையும் நாட்களில் கேது பகவானின் அதிபதியாக இருக்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் அகன்று வெற்றிகள் குவியும்.

• புதன்கிழமையும் அஷ்டமி திதியும் இணைந்த நாளை 'புதாஷ்டமி' என குறிப்பிடுவார்கள். இந்த நாளில் பெருமாளையும் கிருஷ்ண பகவானையும் வணங்கி காரியத்தை தொடங்கினால் ஜெயம் நிச்சயம்.

• வியாழக்கிழமையும் ஏகாதசி திதியும் இணைந்து வரும் நாளை 'ஜீவ ஏகாதசி' என ஜோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நாளை தெரிவு செய்து, ஜீவ சமாதி வழிபாடு, மகான் வழிபாடு, குரு சிஷ்ய வழிபாடு போன்றவற்றில் ஈடுபட்டாலும், ஆலயங்களில் இருக்கும் குரு பகவான் மற்றும் தட்சிணாமூர்த்திக்கு செய்யும் பூஜைகள் முழுமையான பலனை அளிக்கும்.

தகவல்: நர நாராயணன்

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்