அண்ட்ரியா நடிக்கும் 'நோ என்ட்ரி' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

20 Feb, 2023 | 04:54 PM
image

டிகையும் பாடகியுமான அண்ட்ரியா கதாநாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'நோ என்ட்ரி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆர். அழகு கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'நோ என்ட்ரி'. இதில் அண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன், ரன்யா ராவ், மனஸ், ஜெயஸ்ரீ, ஜான்வி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு அஜீஸ் இசையமைத்திருக்கிறார். அடர்ந்த வனப்பகுதியில் உலா வரும் வன விலங்கு வேட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜம்போ சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் காட்டு நாய்களிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு கும்பலை பற்றிய அட்வென்ச்சர் ஜேனரிலான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்