பங்களாதேஷ் மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றது.

நியுஸிலாந்து அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புரூம் 109 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மஷ்ரபீ மூர்தஷா  3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்கள் நிறைவில் 184 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் வில்லியம்ஸன் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக நியுஸிலாந்து அணியின் புரூம் தெரிவுசெய்யப்பட்டார்.