பிரபுதேவா நடிக்கும் 'பஹிரா' படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

Published By: Nanthini

20 Feb, 2023 | 04:54 PM
image

'நடனப்புயல்' பிரபுதேவா பல வேடங்களில் நடித்திருக்கும் 'பஹிரா' படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநரும் நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'பஹிரா'. 

இதில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சோனியா அகர்வால், சாக்ஷி அகர்வால் ஆகிய நடிகைகள் நடித்திருக்கிறார்கள். 

அபிநந்தன் ராமானுஜம் மற்றும் எஸ்‌.கே. செல்வகுமார் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு எஸ். கணேசன் இசையமைத்திருக்கிறார். 

சைக்கோலஜிக்கல் த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை பரதன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.வி. பரதன் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என அறிவிப்பும் வெளியானது. எதிர்பாராத காரணங்களால் இந்த திரைப்படம் திட்டமிட்ட திகதியில் வெளியாகவில்லை. தற்போது இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே 'நடனப்புயல்' பிரபுதேவா வழுக்கை தலையுடனும் வில்லத்தனத்துடனும் நடித்திருப்பதாலும், தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஏழு நட்சத்திர நடிகைகள் இணைந்து நடித்திருப்பதாலும் இந்த திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35