இந்தியாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியாவின், கேரள மாநிலம் திருச்சூரில் ஹோட்டல் நடத்தி வருபவர் பிரதீஷ்(48). இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் அறிவுறுத்தினர்.
தந்தைக்கு கல்லீரல் வழங்க தகுந்த நன்கொடையாளர் கிடைக்காததால், தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை, மருத்துவச் செலவு போன்றவற்றால் பரிதவித்த மகள் தேவானந்தா(17), தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில், இந்திய உடல் உறுப்பு தான சட்டத்தின்படி, 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே உடல் உறுப்பு தானம் செய்ய முடியும் என்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, தனது தந்தைக்கு உறுப்பு தானம் செய்ய விதி விலக்கு கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் தேவானந்தா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், பிரதீஷ் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்ய தேவானந்தாவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து பிப். 9ஆம் திகதி பிரதீஷ்-க்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மகள் தேவானந்தாவின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவரது தந்தைக்கு வைத்தியர்கள் பொருத்தினர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தந்தையும் மகளும் உடல்நலம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து வைத்தியர்கள் கூறுகையில், ‘தேவானந்தா கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கியதால் பாதிப்பு ஏற்படாது. அவருக்கு தானமாக வழங்கிய கல்லீரல் அவரது தந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அவரது உடலில் கல்லீரல் வளர்ந்துவிடும்’ எனத் தெரிவித்தனர்.
தந்தையும், மகளும் நலமாக உள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், தேவானந்தாவின் செயலைப் பாராட்டி அறுவை சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. ஒரு வாரம் வைத்தியசாலையில் தங்கியிருந்த பிறகு, தேவானந்தா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
17 வயது சிறுமி தேவானந்தா தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தேவானந்தாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM