பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (பெப் 19) கைது செய்து செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளையைச் சோந்த குறித்த நபர் சம்பதினமான நேற்று பகல் பஹ்ரைனுக்கு செல்ல கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரின் பையை விமான நிலைய சோதனைச் சாவடியில் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சோதனைச் செய்தபோது பையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் கைத்துப்பாக்கியை மீட்டுள்ளனர.
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM