சிரியாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்தியது. டமஸ்கஸ் அருகே மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த இராணுவ வளாகங்களின் தாயகமாக விளங்கும் கபர் சூசா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அதிக மக்கள் தொகை கொண்ட நகர் மீது வான்தாக்குதல் நடத்தப்பட்டதில் அங்குள்ள ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின.
இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வான்தாக்குதலால் சிரியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
இதேவேளை, துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் திகதி ரிச்டர் அளவில் 7.8 அளவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் அண்டை நாடான சிரியாவையும் கடுமையாக உலுக்கியது. இந்த பூகம்பத்தால் சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கியின் எல்லையோரம் அமைந்துள்ள பல மாகாணங்கள் உருக்குலைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM