சாலாவ வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாட்டின் விசாரணை இன்று (29) இடம்பெறவுள்ளது.

குறித்த விடயத்தினை சாலாவ வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்தார்.

குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்று பல மாதங்கள் ஆகின்ற போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான முறையான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லையென மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

சாலாவ பகுதியிலுள்ள இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலை வெடிப்புக்குள்ளானதில் வீடுகள், மற்றும்  விற்பனை நிலையங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.