மலையகத்தின் பாராம்பரிய கலைகளில் ஒன்றான லவகுசா கூத்து பொகவந்தலாவை பெரிய எலிப்படை கீழ் தோட்டத்தில் வெகுவிமர்சையாக நேற்று (18) சனிக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்டது.
பாரம்பரிய கூத்துகளில் ஒன்றான இந்த 'லவகுசா' பெரிய எலிப்படை கீழ் பிரிவு தோட்டத்தில் 35வது வருடமாக நடத்தப்படுகிறது.
பெரிய எலிப்படை தோட்டத்தை சேர்ந்த ஜீ.கனகராஜாவின் வழிநடத்தலின் கீழ் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் 'லவகுசா' கூத்து, இம்முறை 35ஆவது வருடமாக அரங்கேற்றப்பட்டு வருவதோடு, இம்முறை லவகுசா கூத்தில் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ எலிப்படை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 1 தொடக்கம் 6 வரையிலான மாணவர்கள் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த கூத்தில் லவன், குசன், தங்கால், இராமன், சீதை, வன்னான், வன்னாத்தி, பூமாதேவி, வசிஷ்டர் போன்ற கதாபாத்திரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
லவகுசா கூத்து நிகழ்ச்சிக்கான பயிற்சிகளை பள்ளி ஆசிரியர் ஜீ.கனகராஜா மாணவர்களுக்கு மூன்று மாதங்களாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றதழ்கள் வழங்கப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM