(க.கமலநாதன்)

மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வந்தால் மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இன்னலாக அமையும் எனவே அரசாங்கத்தினை குழப்ப முயற்சிப்பவர்கள் விலகிச் செல்லுங்கள் எம்மால் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினை நிறுவ முடியும் என மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.