தொழிற்சங்கங்களால் அடுத்த வாரம் கறுப்பு வாரமாக பிரகடனம் : நீர், மின்சாரம், வங்கி, துறைமுகம், பெற்றோலிய சேவைகள் புதனன்று முடங்கும்

Published By: Nanthini

19 Feb, 2023 | 01:49 PM
image

(எம்.மனோசித்ரா)

ரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கை மற்றும் அசாதாரணமான முறையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அடுத்த வாரத்தை கறுப்பு வாரமாக பிரகடனப்படுத்தி பிரதான தொழிற்சங்கங்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் பணிப் பகிஷ்கரிப்பும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதன் காரணமாக மின்சாரம், நீர், பெற்றோலியம், வைத்தியசாலைகள், வங்கி, துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய சேவைகள் முடங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினால் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வைத்தியசாலை சேவைகளில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதா அல்லது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (21) செவ்வாய்க்கிழமை தீர்மானிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

ஆனால், 22ஆம் திகதி தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினால் போராட்ட நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் நோக்கம் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தின் பின்னரும் அரசாங்கத்திடமிருந்து தீர்க்கமான பதில் கிடைக்கப் பெறாவிட்டால், தொடர் பணிப் பகிஷ்கரிப்புக்கு செல்ல நேரிடும் என்று மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துவதால் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முடியாது என்றும் அவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே கிழக்கு மாகாணம்...

2025-04-18 09:08:04
news-image

அத்துருகிரியவில் 50 தோட்டாக்கள் கைப்பற்றல்

2025-04-18 09:30:00
news-image

ஓட்டமாவடி - மீராவோடை ஆற்றிலிருந்து சடலம்...

2025-04-18 09:00:43
news-image

காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி...

2025-04-18 07:50:10
news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

உணவருந்தச் சென்றவர்கள் மீது காலியிலுள்ள ஹோட்டல்...

2025-04-18 07:23:41
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12