(க.கமலநாதன்)

கொழும்பு மாவட்டத்தில் சிங்கள பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். ஆனாலும் நான் தேர்தலில் வெற்றிக் கொண்டேன். சிங்கள் பௌத்த மக்கள் ஒரு போதும் இனவாதிகளாக செயற்படமாட்டார்கள் என அமைச்சர் எ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

இனவாத்தை தூண்டுவதன் மூலமாக இந்நாட்டிலுள்ள சமாதானச் சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சிக்கும் ஒரு சில நபர்கள் இந்நாட்டில் காணப்படுகின்றார்கள் அவ்வாறானவர்களுக்கும நாம் இடமளிக்க கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டார். 

உலகின் மிகப்பெரிய செயற்கை நத்தார் மரத்தை நான்காம் தடவையாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.