இந்தியாவுடனான போட்டியில் அற்புத ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றியீட்டியது இங்கிலாந்து

19 Feb, 2023 | 07:12 AM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென். ஜோர்ஜ் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (18) நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி 151 ஓட்ட இலக்கை தக்கவைத்து 11 ஓட்ட வெறறியை ஈட்டிக் கொடுத்தனர்.

இதன் மூலம் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலாவது தோல்வியைத் தழுவியது.

அத்துடன் இந்தியாவுக்கு எதிரான மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து 6 - 0 என தனது வெற்றிக் கணக்கை  அதிகரித்துக் கொண்டது.

இன்றைய போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் தனது 3ஆவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டிய இங்கிலாந்து கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்துகொண்டுள்ளது.

ஸ்ம்ரித்தி மந்தனாவும் ரிச்சா கோஷும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு உற்சாகத்தைக் கொடுத்த போதிலும் அது போதுமானதாக அமையவில்லை. ரேனுகா சிங்கின் 5 விக்கெட் குவியலும் பலன்தராமல் போனது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது.

ஐந்தாவது ஓவரில் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தபோது 3ஆவது விக்கெட் சரிந்தது. ஆனால், அதன் பின்னர் நெட் சிவர்-ப்றன்ட், அணித் தலைவி ஹீதர் நைட், அமி ஜோன்ஸ், சொஃபி எக்லஸ்டோன் ஆகியோர் சுமாரான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

நெட் சிவர்-ப்றன்ட் 50 ஓட்டங்களையும் ஹீதர் நைட் 28 ஓட்டங்களையும் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பைக் கொடுத்தனர்.

தொடர்ந்த நெட் சிவர்-ப்றன்ட்டும் அமி ஜோன்ஸும் 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர இங்கிலாந்து நல்ல நிலையை அடைந்தது.

அமி ஜோன்ஸ் 27 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 40 ஓட்டங்களைக் குவிக்க, சொஃபி எக்லஸ்டோன் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்திய பந்துவீச்சில் ரேணுகா சிங் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றி, இந்த வருட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஏஷ்லி கார்ட்னருக்கு அடுத்ததாக 2ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களுக்கு 140 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

ஒரு பக்கத்தில் ஸ்ம்ரித்தி மந்தனா அதிரடியாக ஓட்டங்களைப் பெற்றபோதிலும் மறுபக்கத்தில் விக்கெட்கள் சரிந்தது இந்தியாவுக்கு பாதகத்தைத் தோற்றுவித்தது.

ஷபாலி வர்மா (8), ஜெமிமா ரொட்றிகஸ் (13), அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (4) ஆகியோர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்து விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

மந்தனாவும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வீராங்கனை ரிச்சா கோஷும் 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தபோதிலும் மந்தனா ஆட்டமிழந்ததும் இந்தியாவின் வெற்றி வெகு தூரத்துக்கு சென்றுவிட்டது.

41 பந்துகளை எதிர்கொண்ட மந்தனா 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார். ரிசச்சா கோஷ் 34 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சாரா க்லென் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58