(நா.தனுஜா)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதை நிராகரிப்பதற்கான வாய்ப்பு அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு இருக்கின்றது என்றால், நாளை ஜனாதிபதி தேர்தலுக்கோ அல்லது பொதுத் தேர்தலுக்கோ உரிய வாக்குச்சீட்டுக்களை அச்சிடுதல் நிராகரிக்கப்படுவதை எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியும் என்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமாத்திரமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளுக்கு மத்தியில் அநாவசியமாக மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய தலையீடுகள் மிகவும் ஆபத்தானவையாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டமையால் தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
அதனையடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்படுவதாக நேற்று (17) தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேலும் கூறியிருப்பதாவது:
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதை இன்று நிராகரிப்பதற்கான வாய்ப்பு அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு இருக்கின்றது என்றால், நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கோ அல்லது பொதுத் தேர்தலுக்கோ உரிய வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணி நிராகரிக்கப்படுவதை எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியும்?
வருங்கால அரசாங்கம் போதியளவு நிதி இல்லை என கூறி பொதுத் தேர்தலையோ அல்லது ஜனாதிபதித் தேர்தலையோ தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தால் என்ன நேரும்?
ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளுக்கு மத்தியில் அநாவசியமாக மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய தலையீடுகள் மிகவும் ஆபத்தானவையாகும் என்று எச்சரித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM