(ஆர்.யசி )

நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றி வருகின்றது. அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் மிகச்சரியாக உள்ளது. அதேபோல்  புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் விடத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

புதிய அரசியல் அமைப்பின் மூலம்   ஜனாதிபதி முறைமையையே இல்லாதொழிக்கும்  நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருவதாகவும்  சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களின் கருத்தறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டது.

அரசியல் அமைப்பு உருவாக்கம் மற்றும் அரசாங்கதின் நகர்வுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.