விபத்தில் உயிரிழந்த மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் கெளரவிப்பு !

Published By: Nanthini

18 Feb, 2023 | 02:58 PM
image

விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதிதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால், சிறுநீரக ‍தேவையை எதிர்பார்த்து, அவதியுறும் இன்னொருவருக்கு உயிர் வாழ சந்தர்ப்பம் ஏற்படுகிறது. 

அந்த வகையில் இச்சிறுநீரக தானத்தை உயிரிழந்தவரது பெற்றோரின் ஒப்புதலுடன், அவர்களது விருப்பத்தின் பெயரில் இன்னொருவருக்கு சிறுநீரகம் தானமாக வழங்கப்பட்ட நிலையில், சிறுநீரக செயலிழப்பினால் அவதியுற்ற நபரொருவருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் மூலம் அந்த சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. 

இந்நிலையில் அறுவை சிகிச்சையளிக்கப்பட்ட நபர் தற்போது உடல் நலம் பெற்றுள்ளார்.

இதன் காரணமாக சிறுநீரக தானம் செய்த பெற்றோர் அண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு, அவர்களால் மருத்துவமனையின் சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மேலும் மூன்று சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் அடங்கிய பகுதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த மூன்று சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியவர்களுக்கு வைத்தியசாலை சார்பில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நன்றி தெரிவித்தார். 

இந்நிகழ்வில் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ பீடாதிபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சகல தொகுதிகளிலும் யானை சின்னத்தில்...

2025-03-17 18:24:37
news-image

சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்...

2025-03-17 17:40:31
news-image

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள்...

2025-03-17 17:33:53
news-image

யாழ். அம்பன் பகுதியில் மதுபோதையில் அயல்...

2025-03-17 17:32:00
news-image

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின்...

2025-03-17 17:26:01
news-image

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்...

2025-03-17 17:25:29
news-image

தமிழ் அரசுக் கட்சி கிளிநொச்சியில் வேட்புமனுத்...

2025-03-17 17:40:52
news-image

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை...

2025-03-17 17:24:09
news-image

யாழில் மே மாதம் கனேடிய கல்வி...

2025-03-17 17:23:19
news-image

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல...

2025-03-17 17:15:43
news-image

பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள்...

2025-03-17 17:12:17
news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49