அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குநர் 'கலாசூரி' திவ்யா சுஜேனின் மாணவி நிரஷ்ராயா கஜனின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கொள்ளுப் பெயரன் டாக்டர் ராஜ்குமார் பாரதி இந்நிகழ்வுக்கு இசை வழங்குவதோடு மட்டுமன்றி, முதன்மை விருந்தினராகவும் வருகை தந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் சி. மௌனகுரு, கெட்வே குழும நிறுவனங்களின் தலைவர் மருத்துவ கலாநிதி முனைவர் ஹர்ஷ அலஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும், மறைமலையடிகளாரின் கொள்ளுப் பெயர்த்தி கவிஞர் கலைச்செல்வி புலியூர் கேசிகன், தெஹிவளை மற்றும் ரத்மலான கெட்வே கல்லூரிகளின் அதிபர் திருமதி பிரியந்தி செனவிரத்ன ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அத்துடன் யோகக்கலை நிபுணர் திருமதி ஸ்ரீப்ரியா இந்திரமோகன், சென்னை சரசாலயா நடனப்பள்ளி நிர்வாக இயக்குநர் 'நாட்டியச் செம்மல்' சண்முகசுந்தரம் ஆகியோருடன் இந்திய அணிசேர் கலைஞர்கள் பங்குகொள்ளவுள்ளனர்.
தொல்காப்பியம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை என காலந்தோறும் தமிழ் இலக்கியக் காட்சிகள் நாட்டிய மார்க்கத்தின் வழி முத்தமிழ்ப் படைப்பாக அரங்கேறி வரும் வரிசையில் இந்த அரங்கேற்ற நிகழ்வுக்கு முத்தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது, அபிநயக்ஷேத்ரா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM