காதலர் தினத்தை முன்னிட்டு "யாரோ அது யாரோ தொலைவினில் குரல் கேட்குதே…” காணொளிப் பாடல் வெளியீடு

Published By: Nanthini

18 Feb, 2023 | 01:28 PM
image

(எம்.நியூட்டன்)

ஜித் சுவேந்திராவின் AJS Entertainment தயாரிப்பில் T.வினோத்தின் இயக்கத்தில் VM film makers படக்குழுவினரால் உருவாக்கப்பட்ட “யாரோ அது யாரோ தொலைவினில் குரல் கேட்குதே…” என்ற காணொளிப் பாடலானது காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. 

இப்பாடலின் வரிகளை லதீப் பாலசுப்பிரமணியன் எழுதியுள்ளார். வெற்றி சிந்துஜன் இசையமைத்து, அவரோடு இணைந்து மதுஸ்ரீ ஆதித்தனும் இனிமையான குரலில் பாடியுள்ளனர். 

எந்த பாத்திரத்தை கொடுத்தாலும் இயல்பாக, சிறப்பாக நடிக்கக்கூடிய நம் நாட்டின் இளம் நடிகரான ஜெறாட் நோயல் இந்த பாடலில் நடித்துள்ளார். அவரோடு நடிகை மான்விழியும் இணைந்து நடித்து பாடலுக்கு வலு சேர்த்துள்ளார். 

விதுசன் மற்றும் யானுசன் ஒளிப்பதிவு மற்றும்  படத்தொகுப்பினை செய்துள்ளார். அத்துடன் டேறியன் ஒப்பனை மற்றும் கலை இயக்குநராகவும், சுவிகரன் மற்றும் ரகீதன் உதவி இயக்குநர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

ஹம்சாயினியின் உடை வடிவமைப்பு இப்பாடலுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. 

இப்பாடல் நமது படைப்பென்ற உணர்வுடன் வாழ்த்தி, வரவேற்று, ஆதரவு வழங்குவது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி'...

2025-03-19 16:02:24
news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-19 16:06:28
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23