சாதனை படைத்த 'கப்ஜா' பட பாடல்

Published By: Digital Desk 5

18 Feb, 2023 | 12:59 PM
image

நடிகை ஸ்ரேயா சரண் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'கப்ஜா' எனும் திரைப்படத்தில் அவர் தோன்றி பாடி நடித்திருக்கும் 'நமாமி நமாமி..' எனத் தொடங்கும் பாடல் இணையத்தில் வெளியான இருபத்திநான்கு மணித் தியாலத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கப்ஜா'. இதில் நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் ஆகியோர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். 

ஸ்ரேயா சரண் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான்சிங், சமுத்திரக்கனி, நவாப் ஷா, மனோஜ் பாஜ்பாய், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஜே. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். 

ஆர். சந்துரு தயாரிப்பாளராகவும், அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பாளராகவும் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது இதன் போது படத்தின் இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் நடிகர் காமராஜ் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர் சந்துரு படத்தின் நாயகி ஸ்ரேயா சரண் ஆகியோர் பங்கு பற்றினர் இந்நிகழ்வில் ஸ்ரேயா சரண் நடித்த 'நமாமி நமாமி..' எனும் பாடலின் காணொளி வெளியிடப்பட்டது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற 'நமாமி நமாமி சுந்தர சுவாமி நர்த்தனம் ...' எனத் தொடங்கும் பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

பாடலாசிரியரும், வசனகர்த்தாவுமான மதுரகவி எழுதியிருக்கும் இந்தப் பாடலை தமிழில் பாடகி வைஷ்ணவி கண்ணன் பாடியிருக்கிறார். மஹா சிவராத்திரியை மையப்படுத்திய பாடல் என்பதாலும், பக்தி உணர்வு ததும்பும் பாடல் என்பதாலும் இதற்கு திரையிசை ரசிகர்களைக் கடந்து, பக்தி இசை ஆர்வலர்களையும் கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூஜையுடன் தொடங்கிய பிரபு தேவாவின் 'பேட்ட...

2023-06-02 10:57:34
news-image

சமுத்திரகனி நடிக்கும் 'விமானம்' பட முன்னோட்டம்...

2023-06-02 10:43:53
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு...

2023-06-02 10:44:21
news-image

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' ஒடியோ வெளியீடு

2023-06-02 10:43:16
news-image

எஸ்.ஜே. சூர்யாவின் 'பொம்மை' திரைப்படத்தின் வெளியீட்டு...

2023-06-02 10:46:49
news-image

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' பட தொடக்க...

2023-06-02 09:55:25
news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00