பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் - நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவிப்பு

Published By: Nanthini

17 Feb, 2023 | 06:18 PM
image

(எம்.மனோசித்ரா)

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். 

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தேர்தலுக்கு நிதி வழங்குவது கடினமாகும் என நிதி அமைச்சின் செயலாளர் கூறியதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அத்தியாவசிய சேவைகளை பேணுவதற்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானத்தையும் நிதி அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று முற்பகல் அறிவித்தது.

எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என்றும், அதற்கான தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு போதிய நிதி வழங்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்தினால் அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்திருந்த நிலையில், நிதி அமைச்சின் செயலாளரினால் இன்றைய தினம் இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37