துருக்கி பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அடைக்கலம் வழங்கியுள்ள இலங்கையர்

Published By: Rajeeban

17 Feb, 2023 | 04:45 PM
image

துருக்கிபூகம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களால் மனமுருகியுள்ள அங்கு வசிக்கும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவ முன்வந்துள்ளனர்.

45க்கும் அதிகமானவர்களை பலியெடுத்துள்ள துருக்கி பூகம்பம் அங்கு வசிக்கும் இலங்கையர்களின் மனதில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் திட்டமுகாமையாளராக பணியாற்றும் அங்கு 8 வருடங்கள் வசிக்கும் தில்ஹானி சந்திரகுமார் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவமுன்வந்துள்ளார்.

அவர் தனது கணவருடன் இணைந்து சல்வேசன் ஆர்மி மூலமாக பாதிக்கப்பட்ட துருக்கி மக்களிற்கு உதவி வழங்கிவருகின்றார்- அவர்களை பராமரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

துருக்கியில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார், அந்த குடும்பத்தில் ஒன்றரை மாத குழந்தையும் காணப்படுகின்றது, அவர் அந்த குழந்தை உட்பட குறிப்பிட்ட குடும்பத்திற்கு தனது மேல்மாடி வீட்டில் இடமளித்துள்ளார்.

நிலநடுக்கத்தின் பேரழிவின் நம்பமுடியாத தன்மை மற்றும் அதன் அதிர்ச்சிகர விளைவு  பாதிக்கப்பட்ட குடும்பத்தை பொறுப்பேற்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபடும் மனோநிலையை அவருக்கு வழங்கியுள்ளது.

துருக்கியில் இடம்பெற்ற பெருந்துயரம் காரணமாக குழந்தையின் வீடு தரைமட்டமாகியுள்ளது- உறவினர்களின் வீடுகளும் முற்றாக சேதமடைந்துள்ளன,சேமித்த சிறிய அளவு பணத்தை தவிர அந்த குடும்பம் எதுவுமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட குழந்தையின் தந்தை கட்டுமான தொழிலாளர்.

அந்த குடும்பத்தினர் விரும்பும்வரை அவர்களை பராமரிப்பதற்கு டிலினி முன்வந்துள்ளார்.

நான் இதனை அதிக செலவுபிடிக்கும் நடவடிக்கையாக கருதவில்லை,என கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47