கோவில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது ; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் - நீதிமன்றம்

Published By: Rajeeban

17 Feb, 2023 | 02:30 PM
image

கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், “தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், அருள்மிகு மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில்கள் உள்ளன. இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை குலதெய்வ கோயிலாகக் கொண்டுள்ள நாங்கள் வழிவழியாக வழிபட்டு வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய உயர் சாதியினர் சிலர் இந்த கோவிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். இந்த கோவில் உயர் சாதியினருக்கு சொந்தமான கோவில் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். எனவே இந்த ஆண்டு நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோவிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என குறிப்பிட்டு, அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகம், காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன்...

2025-02-19 10:36:20
news-image

நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் -...

2025-02-19 10:27:08
news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி :...

2025-02-19 11:22:57
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31