logo

காலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி : கைதான சாரதிக்கு திடீர் நெஞ்சு வலி

Published By: Vishnu

17 Feb, 2023 | 11:54 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கராபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 45 வயதுடைய ஆணொருவர் பலியானதுடன், பொலிஸாரல் கைது செய்யப்பட்ட ‍மோட்டார் வாகன சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக கராப்பிட்டிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கடந்த 16 ஆம் திகதியன்று கராபிட்டிய பெலிகஹ திசையை நோக்கி மோட்டார் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தவர் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுவரொன்றின் மீது மோதியுள்ளதுடன், அப்பகுதியில் எதிர்த்திசையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீதும் மோதியுள்ளார். 

இந்த வாகன விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 45 வயதுடைய பொத்தல பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

இந்த வாகன விபத்தை ஏற்படுத்திய மோட்டார் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக  பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்‍னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்தது...

2023-06-07 21:58:14
news-image

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு...

2023-06-08 06:24:12
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை பலப்படுத்த...

2023-06-07 21:57:30
news-image

ஊடகத்துறையை முடக்கி ஊழலை இல்லாதொழிக்க முடியாது...

2023-06-07 21:20:37
news-image

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் ...

2023-06-07 20:38:39
news-image

தொழில் முயற்சியாளர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை...

2023-06-07 21:03:33
news-image

கைத்தொழிலாளர்களின் கடன் தவணைகளை செலுத்த சட்ட...

2023-06-07 21:17:50
news-image

பொருளாதார பாதிப்புக்கு கடந்த அரசாங்கம் மற்றும்...

2023-06-07 21:02:43
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஒரு சட்டம் :...

2023-06-07 21:34:13
news-image

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது யார் ?...

2023-06-07 21:32:19
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைதுசெய்தமுறை தவறானது -...

2023-06-07 21:26:44
news-image

தென்னிலங்கை வாக்குகளுக்காகவே கஜேந்திரக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்...

2023-06-07 21:24:37