தென்ஆப்பிரிக்க ஜோடி ஒன்று நீருக்குள் நீண்ட நேர முத்தம் கொடுத்து, 13 ஆண்டு கால கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளனர்.
மைல்ஸ் கிளவ்டையர் மற்றும் பெத் நீல் தென்ஆப்பிரிக்காவில் வசித்து வரும் தம்பதியாவர்.கிளவ்டையர் கனடா நாட்டை சேர்ந்தவர் .
நீல், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும், 5 ஆண்டுகளுக்கு முன்பு பெர்முடா நாட்டில் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர். தொடர்ந்து இவர்களது காதல் திருமணத்தில் முடிந்தது. இந்த ஜோடிக்கு ஒன்றரை வயதில் நிவே என்ற மகள் உள்ளார்.
நீச்சல் வீரர், வீராங்கனைகளான இருவரும் திருமணத்திற்கு பின்னர் தென்ஆப்பிரிக்காவில் ஒன்றாக வசித்து வருகின்றனர். காதலர் தினத்தில் புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பிய அவர்கள், அதற்காக மாலைத்தீவுக்கு சென்றுள்ளனர்.
அதன்பின் தங்கும் விடுதி ஒன்றில் இதற்கான முயற்சியில் இறங்கினார்கள். இவர்களது கின்னஸ் சாதனை முயற்சியை அறிந்த பலர் திரளாக கூடி விட்டனர். லக்ஸ் சவுத் ஆரி அடால் என்ற தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளத்திற்குள் இந்த ஜோடி, தேவையான உபகரணங்கள், உடைகளை அணிந்தபடி இறங்கியது.
அதன்பின் தொடர்ந்து கிளவ்டையரும், நீலும் முத்தம் கொடுத்தபடி இருந்தனர். இதனை, சுற்றியிருந்தவர்கள் படம் பிடித்தனர். ஆரவாரமும் செய்தனர். இவர்களது முத்தம் 4 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகள் வரை நீடித்தது. 13 ஆண்டுகளுக்கு முன்பு, நீருக்குள் முத்தம் கொடுத்தபடி 3 நிமிடங்கள் 24 வினாடிகள் வரை இருந்ததே இதற்கு முன் நிகழ்த்திய கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. இதனை அவர்கள் முறியடித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு கின்னஸ் உலக சாதனை அமைப்பு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM