(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென் ஜோர்ஜ்ஸ் பார்க் விளையாட்டரங்கில் 16 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற 1ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றி பெற்றது.
அப் போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்தி வெற்றி ஈட்டியதன்மூலம் அரை இறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்பை அவுஸ்திரேலியா வெகுவாக அதிகரித்துக்கொண்டுள்ளது.
அதேவேளை, நியூஸிலாந்துக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் மிகச் சிறந்த ஓட்ட வேகத்துடன் இலங்கை வெற்றிபெற்றால் அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை பெறக்கூடியதாக இருக்கும். ஆனால், வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமிருப்பதால் இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு நிச்சயமற்றதாகவே இப்போதைக்கு காணப்படுகிறது.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 113 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 15.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 113 ஓட்டங்களைப் பெற்று 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இலங்கைக்கு எதிராக இதுவரை விளையாடிய 7 சர்வதேச இருபது 10 கிரிக்கெட் போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயமாகும்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான அலிசா ஹீலி, பெத் மூனி ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து தமது அணியின் வெற்றியை மிகவும் இலகுவாக்கினர்.
அவர்கள் இருவருக்கும் எந்த ஒரு இலங்கை பந்துவீச்சாளராலும் சவால் விடுக்க முடியாமல் போனது.
பெத் மூனி 53 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள் உட்பட 56 ஓட்டங்களுடனும் அலிசா ஹீலி 43 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
மந்த கதியில் துடுப்பெடுத்தாடிய போதிலும் போட்டியின் 14ஆவது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன் பின்னர் ஓட்டவேகம் அதிகரிக்கும் எனவும் இலங்கை கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 40 பந்துகளில் 43 ஓட்டங்களுக்கு இலங்கையின் 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 112 ஓட்டங்களாக கட்டுப்படுத்தப்பட்டது.
ஹர்ஷிதா சமரவிக்ரம (34), சமரி அத்தபத்து (16) ஆகிய இருவரும் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து ஹர்ஷிதா, விஷ்மி குணரட்ன (24) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ்ந்தன.
மத்திய வரிசையில் நிலக்ஷி டி சில்வா மாத்திரம் 15 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் மெகான் ஷூட் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் க்றேஸ் ஹரிஸ் 3 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM