மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த போது பல்வேறு அரச முக்கியஸ்தர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர்  ஆர்.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜக்ஷ, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.