இலங்கை ஏ அணியில் மீண்டும் ஏஞ்சலோ, அவிஷ்க; மேலும் சிலருக்கும் வாய்ப்பு

Published By: Vishnu

16 Feb, 2023 | 07:00 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 2ஆவது உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை ஏ அணியில் ஏஞ்சலோ மெத்யூஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இரண்டாவது போட்டியை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களைக் கொண்ட குழாத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணித் தலைவர், சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே, வேகப்பந்து வீச்சாளர்களான இசித்த விஜேசுந்தர மற்றும் அம்ஷி டி சில்வா ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

முதலாவது போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்ற ப்ரவீன் ஜயவிக்ரம, சாமிக்க கருணாரட்ன, மிலான் ரத்நாயக்க ஆகியோர் நீக்கப்பட்டே இந்த மூவரும் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் இலங்கை ஏ அணி தோல்வி அடைந்த முதலாவது போட்டியில் சாமிக்க கருணராட்ன துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி அரைச் சதம் குவித்திருந்தார். ஆனால் பந்துவீச்சில் அவரால் பிரகாசிக்க முடியாமல் போனது.

இந்தியாவில் இந்த வருட பிற்பகுதியில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை குறிப்பாக மத்திய வரிசையைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் மெத்யூஸை தேசிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இணைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஏ அணியின் தலைவராக தொடர்ந்தும் சதீர சமரவிக்ரம செயற்படுவார்.

இலங்கை ஏ குழாம்

அவிஷ்க பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ, ஏஞ்சலோ மெத்யூஸ், சதீர சமரவிக்ரம (தலைவர்), சஹான் ஆரச்சிகே, துனித் வெல்லாலகே, துஷான் ஹேமன்த, ப்ரமோத் மதுஷான்,  கவிஷ்க அஞ்சுல, இசித்த விஜேசுந்தர, அம்ஷி டி சில்வா. லஹிரு உதார, நிப்புன் தனஞ்சய, சுமிந்த லக்ஷான். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35