(எம்.வை.எம்.சியாம்)
மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தினால் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட16 வயதான மாணவர்கள் மூவர் கைதாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் அன்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய மாணவர் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 14 ஆம் திகதி வீட்டின் அருகே உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குறித்த நபர் அதிவேகமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் சென்ற மாணவர்களை எச்சரித்ததில் இந்த தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்தேகநபர்கள் தலைக்கவசத்தினால் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.
இதன் போது, பலத்த காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதேவேளை, குறித்த 3 மாணவர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன் சந்தேகநபர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு மதுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மாகொல பிரதேசத்திலுள்ள சிறுவர் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM