(எம்.வை.எம்.சியாம்)
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் 15 ஆம் திகதி புதன்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழகத்தின் 2020/2021 வருட பீடங்களிலும் உள்ள மாணவர்கள் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.எம்.யு.எஸ்.கே. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சமனலவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த முதலாம் வருட முகாமைத்துவ பீட மாணவர்கள் குழுவிற்கும் சிரேஷ்ட பல்கலைக்கழக மாணவர் குழுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்ட தாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது 9 பேர் காயமடைந்த நிலையில் பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் சமனலவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பல்கலைக்கழகத்தின் 2020/2021 வருட பீடங்களிலும் உள்ள மாணவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.எம்.யு.எஸ்.கே. ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 20202021 வருட பீடங்களில் உள்ள மாணவர்களை தவிர பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மற்ய மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும்.
மேலும் இன்று மாலை 4 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் அல்லது விடுதியில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM