புதுமுக நடிகர் ஈஷான் நாயகனாக நடித்திருக்கும் 'அரியவன்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
'உத்தமபுத்திரன்', 'குட்டி', 'யாரடி நீ மோகினி', 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அரியவன்'.
இதில் அறிமுக நடிகர் ஈஷான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை பிரனாலி நடித்திருக்கிறார்.
கே. விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன், வேத்ஷங்கர், கிரி நந்த் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
பாலியல் சுரண்டலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் ஜி பி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் எனும் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.
'நானா பறந்தேனா..' எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் தமயந்தி எழுத, பின்னணி பாடகர் ஹரிச்சரண் மற்றும் பின்னணி பாடகி வந்தனா சீனிவாசன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
இந்தப் பாடலுக்கு வேத் ஷங்கர் இசையமைத்திருக்கிறார். உலகிலுள்ள அனைத்து காதலர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், காதலை மையப்படுத்தி வசீகரிக்கும் பாடல் வரிகளுடன் மென்மையாகவும், மெல்லிசையாகவும் உருவாகியிருப்பதால் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM