'மார்ட்டின்' படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Ponmalar

16 Feb, 2023 | 05:17 PM
image

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான துருவா சர்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மார்ட்டின்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னட இயக்குநர் ஏ. பி. அர்ஜுன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'மார்ட்டின்'. இதில் கன்னட திரையுலகின் 'எக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வைபவி சாண்டில்யா நடிக்கிறார்.

சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை வாசவி என்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் உதய் கே. மேத்தா தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் டீசர் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதியன்று வெளியாகிறது.

கன்னட திரையுலகத்திலிருந்து 'கே. ஜி. எஃப்', 'காந்தாரா' என வரிசையாக இந்திய அளவில் வசூல் ரீதியாக வெற்றி பெறும் திரைப்படங்கள் தயாராகி வருவதாலும், எக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து 'மார்ட்டின்' எனும் திரைப்படமும் தயாராகியிருப்பதாலும், இந்தப் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35