‘கிளாஸ்மேட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Ponmalar

16 Feb, 2023 | 05:31 PM
image

அறிமுக நாயகன் அங்கயற்கண்ணன் நாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கு 'கிளாஸ்மேட்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'தண்டாயுதபாணி', 'நாயகன்', 'பில்லா பாண்டி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சரவண சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கிளாஸ்மேட்ஸ்'.

இதில் புதுமுக நடிகர் அங்கயற்கண்ணன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மயில்சாமி, சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

அருண்குமார் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பிருத்வி இசையமைக்கிறார். குடிகாரர்களின் வாழ்வியலை மையப்படுத்தி நகைச்சுவையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முகவை பிலிம்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அங்கயற்கண்ணன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை அரசியல்வாதியும், சமூக செயற்பாட்டாளருமான அமெரிக்கை. வி. நாராயணன் வெளியிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right