'மஹா சிவராத்திரி' காணும் திருக்கேதீச்சரத்தானே போற்றி! 

Published By: Nanthini

16 Feb, 2023 | 04:56 PM
image

தியந்தமற்ற முதன்மை நிறை 

முழுமுத நித்தில சிவனார்த் தரணியாம் 

ஈஷ்வரன் நல்வரம் மேவி 

இலங்கை வேந்தன் ராவணேஷ்வரன் ஆண்ட 

ரத்தினத்தீவெனும் லங்காபுரி புவனபதி 

உத்திர கைலாயம் நிகர் கொண்டு 

தக்ஷிணமாய் கேது மூர்த்தி தவமியற்றிய 

புண்ணிய ஷேத்திரமாம் திருக்கேதீச்சரம் 

மஹாதலமென சிவனடியார் 

'சிவராத்திரி விழா' காணும் 

கௌரியம்பாள் உடனுறை 

திருக்கேதீச்சரத்தானே போற்றி...! 

துர்யுகத் தேவனாம் 

ஸ்ரீ விஷ்வகர்மா வழித்தோன்றல் 

மனு, மய, சிற்பி, துவஷ்டா, விஷ்வக்ஞ எனும் 

துவஷ்ட்டாவின் அருந்தவப் புதல்வியாம், 

வீணைக்கொடியோன் நற்துணை 

ஸ்ரீ மண்டோதரிக்கு நல்வரம் நல்கி, 

பாலாவிக் கரைதனில் வன்னி விருட்சத்துடன் 

திருக்கோவில் கொண்டு 

'சிவராத்திரி காணும்'  

திருக்கேதீச்சரத்தானே போற்றி...! 

திருத்தேவார ஒலியால் 

சமய குரவர் சம்பந்தர் 

சுந்தரர் செந்நாவுதனில் 

பாமாலை சூடி, 

மாந்தையென நவிலும் மாதோட்டம் 

அகம் செய் மாதொரு பாகனே, 

மகா சூரனாம் 

சூரபத்மன் குலவழி 

துவஷ்ட்டா பிள்ளைப் பேறளித்த 

பெருவள்ளல்லென, 

திருவீழிமிழலை திருத்தாண்டக வரிகளில் 

அப்பர் பெருமான் 

"கேதீச்சரம் மேவினார் கேதாரத்தார்" 

துதியுடன் 'சிவராத்திரி விழா' காணும்  

திருக்கேதீச்சரத்தானே போற்றி....! 

ற்கோயிலாய் தஞ்சைப் பெருவுடையார் 

பொற்கோயில் ஒத்த வகையில் 

நிர்மானம் கண்டு 

சோழப் பேரரசால் 

"ராஜராஜ மஹா தேவன் கோயில்" என 

அகிலம் புகழ்சூழ் திருநாமம் சூடி 

மஹாலிங்கத் தலமென 

சோமஸ்கந்த பெருமூர்த்தியாய் எழுந்தருளி, 

ஈகை நிறை ஈழத்தீவகந்தனில் 

ஈஷ்வரனார் அருளீந்து 

'சிவராத்திரி விழா' காணும் 

திருக்கேதீச்சரத்தானே போற்றி....! 

த்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் 

கரைமேல் நற்கோவில் கொண்டு 

சித்தம் தழைத்தோங்க 

பக்திப் பெருக்கோடு நித்தம்  

பக்திதனை தத்தம் செய் சிவனடியார்கள் 

குறையகல நித்தமும் அருள்வாரி வழங்கும் 

வள்ளலாய், எண்திசை நீர்த்திரை துதி பாட 

கௌரியம்மை சமேதராய் 

திருக்கோவில் எழுந்து 

'சிவராத்திரி விழா' காணும் 

திருக்கேதீச்சரத்தானே போற்றி....! 

ச்சரங்கள் ஐந்தில் முதலென விளங்க, 

முத்துத்தமிழ் செந்தேனுறை ஈழநாவலன்  ஆறுமுகன் 

"தேன் பொந்தெ"ன திருவாய் மொழிய, 

குபேரப்பட்டணச் சரித்திரம் தழைக்க, 

சோழர் குலத்தவர் வைகாசி விசாக சப்த 

நற்தினங்கள் பெருவிழா கீர்த்தி கண்ட, 

அகிலம் வாழ் சைவத் தமிழர் உவகை பொங்க, 

மாசிச் சதுர்த்தசி தனில் 

'சிவராத்திரி விழா' காணும் 

திருக்கேதீச்சரத்தானே 

போற்றி போற்றி போற்றி..! 

- எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவையில் 35 ஆவது வருடமாக நிகழ்த்தப்படும்...

2023-02-19 19:06:52
news-image

மகத்துவங்கள் நிறைந்த மஹா சிவராத்திரி

2023-02-18 11:40:35
news-image

'மஹா சிவராத்திரி' காணும் திருக்கேதீச்சரத்தானே போற்றி! 

2023-02-16 16:56:52
news-image

சிவபெருமானின் சிவ ரூபங்கள்...

2023-02-15 17:15:22
news-image

கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்...

2023-02-08 21:08:52
news-image

ஆன்மிக பாதையில் அன்னதானத்தின் மகத்துவம்!

2023-02-07 17:28:48
news-image

இன்று தைப்பூசம்: முருக பக்தர்களின் போற்றுதற்குரிய...

2023-02-05 15:57:19
news-image

இலங்கையில் தமிழ் இசைக் கலைஞர்களுக்கோ தமிழ்...

2023-01-30 11:34:37
news-image

ஈமச் சடங்கு...!

2023-01-28 16:35:14
news-image

முன்னோர்களின் ஆசி கிடைக்க விரதம் இருந்து...

2023-01-20 21:35:30
news-image

கலை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது -...

2023-01-20 11:08:18
news-image

பிரம்ம முகூர்த்த நேரத்தின் சிறப்புகள்

2023-01-19 17:29:35