மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி நீர்கொழும்பு - கல்கந்த ரயில் கடவையை மறித்துஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் மற்றும்  குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட மேல் மாகாண சபை உறுப்பினர்களுக்கே பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனந்த ஹரிச்சந்திர மற்றும் லலந்த குணசேகர ஆகிய இரு மேல் மாகாண சபை உறுப்பினர்கள் குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.