பரிகாரங்களுக்கு பிறகான பலன்களைப் பெறுவதற்குரிய சூட்சும ஜோதிடம்

Published By: Ponmalar

16 Feb, 2023 | 05:48 PM
image

எம்மில் பலரும் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவதற்காக ஜோதிட நிபுணர்களை அணுகுகிறார்கள். அவர்களும் எம்முடைய ஜாதக கட்டங்களை துல்லியமாக அவதானித்து, பலன்களை பெறுவதற்கான பரிகாரங்களை பரிந்துரைக்கிறார்கள்.

படிகாரங்களை முழு மனதுடனும் ஒருமுகத் தன்மையுடனும் செய்த பிறகும் எதிர்பார்த்த பலன்கள் சிலருக்கு கிடைப்பதில்லை. இது ஏன்? என ஜோதிட நிபுணர்களிடம் கேட்டோம்.

இது தொடர்பாக ஜோதிட நிபுணர்கள் விளக்கமளிக்கையில், ‘ஜோதிடர்கள் பரிந்துரைக்கும் பரிகாரங்கள் பலனளிப்பவைதான். அதனை ஜாதகர்கள் மேற்கொண்ட பின்னரும் அவர்களுக்கு முழுமையான பலன்கள் கிடைப்பதில்லை.

இது குறித்து ஆய்வு செய்தபோது, பரிகாரங்களை செய்யும் தருணத்தில் ஏற்படும் மாய வடிவிலான கர்ம வினைகளே காரணம் என கண்டறிந்தோம். அதாவது ஒருவருக்கு கடன் தீருவதற்கான ஆலய பரிகாரங்களை பரிந்துரைச் செய்திருக்கிறோம். அவர் அந்த பரிகாரங்களை மேற்கொள்ளும் முன்னரும்... மேற்கொள்ளும் தருணத்திலும்... மேற்கொண்ட பின்னரும்... யாருடன் பழகுகிறார்? யாருடன் ஒன்றாக பயணிக்கிறார்? யாருடைய வீடுகளுக்கு சென்று உறங்குகிறார்? யாருடைய வீட்டில் பசியாறுகிறார்? என பல விடயங்கள் அவர்களின் பலன்களை பெறுவதில் தடை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் மேற்கொண்ட விடயங்களில் ஈடுபடும்போது ஜாதகர்களுக்கு, அவர்களையும் அறியாமல் உடனிருப்பவர்களின் கர்ம வினைகளை பெறுகிறார். இதன் காரணமாகவே பரிகாரங்கள் மேற்கொண்ட பிறகும் அவர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதில்லை.

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்க வேண்டுமென்றால், ஒருவர் கடன் நெருக்கடியால் மீள முடியாமல் தவிக்கிறார் என்றால்... அவருக்கு பரிந்துரைக்கும் ஆலய பரிகாரங்களை மேற்கொள்ளும் போது, அவர் கடன் சுமையுடன் இருக்கும் அவரது நண்பருடன் பயணித்திருக்கலாம் அல்லது பயணிக்கலாம். அந்த நண்பருடன் செல்போனில் அதிக அளவு நேரம் பேசி இருக்கலாம் அல்லது அந்த நண்பரின் வீட்டிற்கு சென்று பசியாறி, வேறு வழியில்லாமல் அங்கேயே உறங்கி இருக்கலாம். இது போன்ற செயல்களை சூழல் கருதி நாம் செய்திருந்தால், இதன் காரணமாகவே அவரின் கர்மா எம்முடன் இணைந்து விடுகிறது. ஆலய பரிகாரத்தின் மூலம் உங்களது கர்மாவை அகற்றிய நீங்கள் உங்களையும் அறியாமல் உங்களுடன் ஒட்டிக்கொண்ட உங்கள் நண்பரது அல்லது கூட்டாளியின் அல்லது நெருங்கிய உறவினரின் கர்மாவால், நீங்கள் பரிகாரத்தை மேற்கொண்ட பின்னரும், உங்களுக்கான பலன்கள் கிடைப்பதில்லை. இதனை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதன் காரணமாக கடன் பிரச்சினை, திருமண தடை, குழந்தை பேறின்மை, தொழில் மந்தம், கூட்டுத் தொழில்... என எந்த சிக்கலுக்காக பரிகாரத்தை செய்கிறீர்களோ...!, அதனை யாருடைய துணையும் இன்றி, நீங்களாகவே முழு மனதுடனும் ஒருமுகத் தன்மையுடனும் மேற்கொண்டீர்கள் என்றால், உங்களுக்கு சாதகமான பலன்களை அள்ளித் தரும் தசா புத்தி காலங்களில் நீங்கள் மேற்கொண்ட இந்த பரிகாரங்களால் பலன்கள் எதிர்பார்த்தது போல் முழுமையாக கிடைக்கும்’ என்றார்.

சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்