திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி 440 குடும்பங்களைச் சேர்ந்த 1381 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முத்துநகரைச் சேர்ந்த 225 குடும்பங்கள், மங்கையூத்து பகுதியைச்  சேர்ந்த 200 குடும்பங்கள் மற்றும் வெலிகம பகுதியைச் சேர்ந்த 15 குடும்பங்களுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.