அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை மத்திய மாகாண சபை இன்று (28) நிராகரித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மாகாணசபை உறுப்பினர் எவரும் வாக்கெடுப்புக்கு சமுகமளிக்காததால் குறித்த சட்டமூலம் மேலதிக 32 வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  குறித்த அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை வட மாகாண சபையும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.