(எம்.எம்.சில்வெஸ்டர்)
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாத்தினர், நுவரெலியாவிலுள்ள ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தில் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையான 7 நாட்களுக்கு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 4200 அடி உயரத்திலுள்ள ரதெல்ல கிரிக்கெட் மைதானமானது, இலங்கையின் உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானமாக திகழ்கின்றமை விசேட அம்சமாகும்.
நியூஸிலாந்து காலநிலைக்கு ஏற்றாற்போல் இந்த மைதான காலநிலை மற்றும் தன்மை காணப்படுவதனாலேயே, இலங்கை கிரிக்கெட் குழாத்தினரின் பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்கான வசதிகளை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் செய்து கொடுத்துள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம், கடந்த பல வருட காலமாக ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தை பயன்படுத்த தவறியிருந்த போதிலும், இந்த மைதானத்தை சொந்தமாகக் கொண்டுள்ள திம்புல மெய்வல்லுநர் மற்றும் கிரிக்கெட் கழகத்தின் அனுமதியுடன், மைதானத்தை புனரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
இந்த புனரமைப்பு பணிகளுக்காக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் சர்வதேச அரங்குகள் மற்றும் வசதிகளுக்கான முகாமையாளர் கொட்பிரே தப்ரேரா (Godfrey Dabrera) தலைமையில் இலங்கையின் அனுபவம் வாய்ந்த 20 மைதான பராமரிப்பாளர்கள் குழுவொன்று சென்றிருந்தது.
இந்த புனரமைப்பு பணிகளில், 4 மத்திய ஆடுகளங்கள் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான 5 ஆடுகளங்களை சர்வதேச தரத்திற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் புதிதாக அமைத்துக்கு கொடுத்துள்ளது.
நியூஸிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் 2 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட சர்வதேரச ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் ஆகிய மூவகையான தொடர்களில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM