Samsung Galaxy S23 Ultraஇல் அதிநவீன cameraவோடு அடுத்த நிலைக்கே எம்மை எடுத்துச் செல்லும் செயற்றிறன் மிக்க gaming, அத்தோடு eco-conscious வடிவமைப்பும் இணைந்து Samsungஇன் மிகவும் புதுமையான Galaxy Sஇன் மற்றுமொரு தொடரானது தற்போது கிடைக்கப்பெறுகிறது.
Samsung Electronics Sri Lankaஆனது Galaxy S23 Ultra மற்றும் Galaxy S23ஐ பெப்ரவரி 15ஆம் திகதி Marriott Colomboஇன் Courtyardஇல் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பெருமையுடன் வெளியிட்டது.
Samsung Galaxyயின் ultimate premium phone அனுபவத்தின் புதியதொரு சகாப்தத்தை இது குறிக்கிறது.
Samsung Galaxyஇன் epic cameraஆனது அதன் பாவனையாளர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை ஆராய அதாவது மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் AIஉடனான உண்மையான cinematic Nightography videoக்களை படம்பிடிப்பது போன்ற இன்னும் அதிக வாய்ப்புகளை அளிக்கிறது.
Galaxyக்கான Snapdragon® 8 Gen Mobile Platformஆனது அற்புதமான AI ஊடாக future-ready mobile gaming அம்சம் தொடக்கம் உலகின் அதிவேக mobile graphics மூலம் சக்திவாய்ந்த game play என மிக சிறப்பான அனுபவங்களை உங்களுக்கென அள்ளி வழங்கப் போகிறது.
Galaxy S23 Ultraஉடன் கிடைக்கும் உட்பொருத்தப்பட்ட S Pen பற்றி அதன் பல நீண்ட காலப் பாவனையாளர்களுக்கு நன்கு தெரியும். அதுமட்டுமன்றி Samsung Galaxyஇன் அதிக வாய்ப்புகளை வழங்கும் love offers மற்றும் note taking அம்சம் மற்றும் பொழுதுபோக்கு என பலவற்றையும் அது அள்ளி வழங்குகிறது.
அனைத்து Galaxy S23 seriesகளிலும், புத்தாக்கம் பெற்ற அதன் நவீன தரமும், எம்மை தன்வசம் ஈர்க்கக்கூடிய அதன் வடிவமைப்பும் பிரமாதமானது.
அத்தோடு மற்றைய Samsung Galaxy Smartphoneகளை காட்டிலும் Galaxy S23ஆனது recycle செய்யப்பட்ட பொருட்களை கொண்டு அதன் கூடுதலான பாகங்கள் என்பன உற்பத்தி செய்யப்பட்டிருப்பதானது Samsung நிறுவனத்தின் பேண்தகைமையும் அதன் அர்ப்பணிப்பும் மென்மேலும் மேம்பட்டிருக்கிறது என்பதற்கு சான்றாகும்.
“ஆக்கபூர்வமான தொழில்நுட்பத்தின் மதிப்பானது அது மக்களுக்கு இன்று எவ்வகையில் உதவுகிறது என்பதன் மூலம் மட்டுமன்றி அது எவ்வகையில் சிறந்ததொரு எதிர்காலத்துக்கென தனது பங்களிப்பை செய்கிறது என்பதை கொண்டும் அளவிடப்படுகிறது" என Samsung Sri Lankaவின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.SangHwa Song தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில்,
"முழு Galaxy S23 seriesகளும் நம்பகமான மிகச் சிறந்த தரத்தினையுடைய Smartphone அனுபவங்களை அள்ளி வழங்கப்போகிறது. பலம் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் பேண்தகைமை என்பனவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் அதி உச்ச செயற்றிறனை மறுவரையறை செய்யும் சிறந்த பணியில் நாங்கள் இருக்கிறோம்” என்றார்.
"Galaxy S23 Ultraஆனது எந்த வகை புகைப்படக் கலைஞர்களுக்கும் படப்பிடிப்பானது தனித்துவமானதாகவும் இலகுவானதாகவும் அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய எந்த Lighting Conditionகளுக்கும் தன்னை ஈடு கொடுக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளதோடு அனைத்து விபரங்களையும் வழங்கும் வகையிலும் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட Nightography திறன்களில் ஏற்படக்கூடிய மாற்றமானது Galaxy S தொடர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தினையே பல்வேறு வித்தியாசப்பட்ட சுற்றுப்புற சூழ்நிலைகளிலும் மேம்படுத்துகிறது.
ஓர் இசை நிகழ்ச்சியில் மனதுக்குப் பிடித்த பாடலை படமாக்குவதோ அல்லது aquarium ஒன்றில் ஒரு selfie எடுப்பதோ அல்லது இரவு உணவு வேளையின்போது நண்பர்களோடு group shotகளை எடுப்பதோ... எதுவாக இருப்பினும் அதனை எடுக்கும் ஒருவர் மிகத் தெளிவான படங்களையும் வீடியோக்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
Samsung Galaxyஇல், Galaxy S23 Ultraஆனது ஒரு புதிய 200MP Adaptive Pixel sensorஐ தன்னகத்தே கொண்டதாக அமைந்திருக்கிறது. இது அற்புதமான மறக்க முடியாத தருணங்களை, மனதை வியக்க வைக்கும் துல்லியத்துடன் படம்பிடிக்கிறது.
மேலும், இது ஒரே நேரத்தில் 5 எனும் வகையில், multiple levelகளை கொண்ட high-resolution செயற்பாட்டை ஆதரிக்க இது pixel binning தொழிற்பாட்டை பயன்படுத்துகிறது. மேலும், selfie cameraக்கள் முன்னெப்போதையும் விட இன்று நாம் எவ்வாறு தொடர்புகொள்கிறோம் என்பதில் பாரிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.
Galaxy S23 seriesஆனது சிறப்பான front facing படங்கள் மற்றும் videoக்களை பெற்றுக்கொள்ள 30fpsஇலிருந்து 60fps வரை இயங்கக்கூடிய வேகமான autofocus மற்றும் எங்களின் முதல் முதலான Super HDR selfie கெமராவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.
Galaxy S23 seriesஇல் அதிநவீன வடிவமைப்பை தரக்கூடிய புத்தாக்கமானது நிகழும்போது, அது உயரிய செயற்றிறனை கொடுக்கிறது.
அத்தோடு கூட பேண்தகைமையும், அதி உச்ச மகிழ்ச்சியான அனுபவத்தையும் வழங்குகிறது. அதன் செயற்பாடானது மேம்படுத்தப்பட்டதன் நிமித்தம் Galaxy S23 Ultra மூலம் அழகாக தெளிவான புகைப்படங்களை இப்போது எளிதாக எடுக்க முடியும். இதற்காக மிகவும் நன்றி.
அதுமட்டுமன்றி, விறுவிறுப்பான புகைப்படங்களையும், தனித்து விளங்கும் அழகிய selfieகளையும், இருண்ட சுற்றுச் சூழலிலும் குறைவான ஒளியுடன் கூடிய சினிமாத்தர வீடியோக்களையும் Nightographyயின் உதவியோடு இலகுவாக எடுக்க முடியும்" என Samsung Sri Lankaவின் தயாரிப்பு முகாமைத்துவத்தின் பிரதான முகாமையாளர் திரு. Thushara Rathnaweera தெரிவித்தார்.
சிறந்ததோர் ஆக்கத்தை உருவாக்கத் துடிக்கும் மற்றும் தனிப்பயனாக்கத்தை அனுபவிக்க விரும்பும் பாவனையாளர்களுக்கு என்றே Galaxy S23 series ஊடாக புகைப்பட அனுபவத்தையே வித்தியாசப்படுத்திக் காட்டும் சாதனத்தொகுப்பை வழங்குகிறது.
The Expert RAW App 6ஆனது Samsung Galaxyயில் பிரத்தியேகமாக தற்போது கிடைக்கிறது.
மேலும், இதில் RAW, JPEGஇல் DSLR-பாணியில் படம் பிடித்துக்கொள்ள மற்றும் editingஐயும் கூட மேற்கொள்ள முடிகிறது.
இனிவரும் காலத்தில் பருமனான cameraகளின் பாவனைக்கு அவசியமே இருக்காது. Samsungஇன் Native Cameraவின் பயன்பாட்டில் நிபுணர் RAW எனப்படும் featureஐ Galaxy S23இல் பதிவிறக்கம் செய்துகொண்டு, இப்போதே பாவனையாளர்கள் Multiple exposureகள் கொண்ட photo கலையை பரீட்சித்துப் பார்க்கலாம் அல்லது Astrophoto settings ஊடக பால்வீதியின் காட்சிகளை மிகத் தெளிவாகவும் படம் பிடிக்கலாம்.
Galaxy S23இல் iconic Samsung Galaxy cameraஆனது மேம்படுத்தப்பட்டதொரு தோற்றத்தை கொடுக்கிறது.
மேலும், இதில் இருக்கக்கூடிய contour housingஆனது இனிமேலும் அங்கு காணப்படாது.
இம்மாற்றமானது முழு Galaxyஇன் seriesகளையும் தனித்துவமாக்குவதோடு, Galaxyஇன் வடிவமைப்புக்கு ஒரு புதிய சகாப்தத்தையே குறிக்கிறது.
படைப்பாளிகள் மற்றும் விளையாட்டுத்துறையை சார்ந்தோர் தாம் இருக்கும் தற்போதைய நிலைகளில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்வது தொடர்பான சாத்தியங்களையிட்டு தொடர்ந்தும் மறுபரிசீலனை செய்துகொண்டிருப்பதற்கு எப்போதும் தொழில்நுட்பம் அவசியப்படுகிறது. Samsung மற்றும் Qualcomm என்பன ஒன்றாக இணைந்து Galaxyக்கான brand new Snapdragon® Gen 2 Mobile Platform மூலமாக Samsung Galaxy அனுபவத்தையே மேம்படுத்துகிறது. Samsung Galaxy smartphoneகளில் இற்றை வரை இல்லாத அதிக பலம் வாய்ந்த, திறமையான மற்றும் வேகமான இயங்குதளம் Snapdragon ஆகும்.
இதேவேளை Galaxy S23 Ultraஇல் உள்ள 5000mAh batteryஆனது deviceஇன் அளவை அதிகரிக்காமல், Galaxy S22 Ultraவை விடவும் பெரிய கெமராவை இயக்குகிறது.
Digital realism என்பது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு Mobile gamingஆனது பிரதான நீரோட்டத்துக்கு வருவதன் மூலம் Galaxy S23 Ultraஆனது real-time ray tracingஐ ஆதரிக்க தயாராக உள்ளது.
இதன் மூலம் பாவனையாளர்கள் குறிப்பிட்டுக் கூறக்கூடிய விதமாக அதிக உயிரோட்டமான காட்சிகளை பார்க்க முடியும். ஒளியின் ஒவ்வொரு கதிர்களையும் கண்காணித்து உருவகப்படுத்தித் தருவதற்காக தொழில்நுட்பத்துக்கு எமது மனமார்ந்த நன்றி. அத்தோடு Samsung Galaxyஇன் vapor chamberஆனது தற்போது பெரிதாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு Galaxy S23 series modelகளிலும் உங்கள் gaming marathonஆனது தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
Galaxy S23 seriesஉடன், Samsung Galaxyஆனது சுற்றுச்சூழலில் அதன் தாக்கத்தை குறைத்துக்கொள்ளவும், அத்தோடு சுற்றுச்சூழலின் தரம் மற்றும் அதன் அழகியல் சமநிலையையும் இன்னும் அதிகமாக பாதுகாக்கிறது.
Galaxy S23 series தயாரிப்பானது குறைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கத்துக்காக UL ECOLOGO® எனப்படும் சான்றிதழை பெற்றதாகும்.
மேலதிக உச்ச பாதுகாப்புக்காக Knox Vaultஆனது Galaxy S21 series முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதனை விட அதிகமாக Galaxy S23 தொடரின் OS உட்பட அதி முக்கியமான தகவல்களை மற்ற சாதனங்களிலிருந்து தனிமைப்படுத்துவதன் ஊடாக பெரும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது.
Galaxy S23 Ultraஆனது இரண்டு இயற்கையோடு ஒன்றிய Phantom Black மற்றும் Green வர்ணங்களிலும் மேலும் Galaxy S23ஆனது Phantom Black, Green மற்றும் Cream ஆகிய வர்ணங்களிலும் தற்போது கிடைக்கிறது.
மேலும், Epicஐ பகிர தயாராகுங்கள். உங்கள் புதிய Galaxy S23 Series 5Gஐ முன்கூட்டியே நீங்கள் order செய்து, Dialogஇல் இருந்து 2 மாதங்களுக்கான இலவச 300GB data bundle சலுகையை நீங்கள் அனுபவிக்க முடியும்,
அதேபோன்று 300GB data bundleஐ மொபிடலிடம் இருந்தும் நீங்கள் 3 மாதங்களுக்கு அனுபவிக்க முடியும்.
OneDriveஇல் 6 மாதங்களுக்கு 100 GB சலுகையையும் மற்றும் 3 மாதங்களுக்கான இலவச Spotify ப்ரீமியம் சந்தாவையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் புதிய Galaxy S23ஐ முன்கூட்டியே order செய்து 128,000.00 ரூபா வரையில் சேமித்துக் கொள்ளவும் முடியும். (*நிபந்தனைகள் பொருந்தும்)
நாடு முழுவதிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களான John Keels Office Automation மற்றும் Softlogic Mobile Distribution என்பவர்களிடம் இருந்தும் கிடைக்கிறது. இதனை நீங்கள் விற்பனை ஸ்தாபனங்களுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள Samsung Logoவைப் பார்த்தும் கூட எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
மேலும், இதனை அங்கீகரிக்கப்பட்ட பங்காண்மையாளர்களான Softlogic Retail, Singer and Singhagiri, Network Partners Dialog மற்றும் Mobitel ஆகியவற்றிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், online portalகளிலும் Samsung EStore (samsungsrilanka.lk), MySoftlogic.lk, Daraz.lk. என்பனவற்றில் இருந்தும் நீங்கள் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.
நாம் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு சேவை செய்யக் காத்திருக்கிறோம். Samsung Galaxy Smartphone ஒன்றை நீங்கள் கொள்வனவு செய்ய முடிவு செய்யும்போது நீங்கள் நிச்சயம் மன அமைதியை அனுபவிப்பீர்கள்.
Samsung Members App பயன்பாட்டில் உள்ள ஊடாடும் கண்டறிதல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவை உங்கள் சாதனங்களின் செயற்றிறனானது மேம்படுத்துவதை எளிதாக்குகிறது. அதேவேளை உங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படும்போது சிக்கல்களை சரிசெய்ய எங்கள் helpline உதவுகிறது.
இலங்கையில் Samsungஆனது தொடர்ந்து மூன்று வருடங்களாக No.1 Smartphone Brandஆக ‘மிகவும் விரும்பப்படும் பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் வர்த்தக நாமமாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது என Brand Finance Lankaவின் மதிப்பாய்வு மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் Samsungஇன் Customer Baseஆனது அனைத்து வயதினர் மத்தியிலும், குறிப்பாக, Gen Z மற்றும் Millennial பிரிவிலும் பரவியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM